கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் தங்கத் தகடை திருடியது யார்?
#Investigation
#Police
Prathees
3 years ago

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்திற்கு சொந்தமான 38 பவுண் தங்கத் தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருடப்பட்ட 38 பவுண் எடை கொண்ட தங்கத் தகடு 2019ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த தங்கத் தகடு திருடப்பட்டமை தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட காவல்துறை குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.



