பிரித்தானியாவில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - நடந்தது என்ன
Nila
3 years ago

இங்கிலாந்தின் தென்மேல் பிஷெர்ட்டன் சுரங்கத்தினுள் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பாரிய விபத்து என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.என்றாலும் சம்பவத்தில் எவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என பிரித்தானிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பியூலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
சுமார் 100 பேரை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தென்மேல் மற்றும் கிரேட் வெஸ்ட்டர்ன் ரயில்கள் இரண்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
நாளை நவம்பர் 2ம் திகதி வரை குறித்த ரயில் பாதையூடான சேவை ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



