ஐ.நா வில் பிரசாரம் செய்யும் டைனோசர்
Keerthi
3 years ago

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் (Virtual Technology) உருவாக்கப்பட்டுள்ள டைனோசர் ஒன்று “பருவநிலை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அண்மையில் நடைபெற்ற ஐ. நா பொதுச் சபைக் கூட்டத்தின் போதே ஃபிரான்கி தி டைனோ (Frankie the Dino) என்று அழைக்கப்படும் குறித்த டைனோசரானது "'அழிவைத் தேர்ந்தெடுக்காதே', சாக்குப்போக்குகள் சொல்வதை நிறுத்திவிட்டு, மாற்றங்களைச் செய்யத் தொடங்கவும்” போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதற்கு நடிகர் ஜக் பிளாக்(Jack Black) குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



