புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க மின் சிகரெட்டை பரிந்துரைக்கும் பிரித்தானியா

பிரித்தானியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க மற்றும் நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கு மின் சிகரெட்டுகளைப் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இதனால் 64,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே புகையிலை புகைப்பதைவிட மின் சிகரெட்டுகளைப் பிடிப்பில் ஆபத்துகள் குறைவாகக் காணப்படுவதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், சோதனைக்குப் பின், அந்நாட்டின் தேசியச் சுகாதாரச் சேவையின்கீழ், மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



