நாட்டில் புகையிரத பயணிகளுக்கு முக்கிய தகவல்
Prabha Praneetha
3 years ago

இலங்கையில் புகையிரத பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சமிக்ஞையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பொல்கஹாவலைக்கும் இடையிலான பிரதான புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளன.
அதேநேரம் சமிக்ஞை பிரச்சினை காரணமாக ஏனைய பாதைகளிலும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.



