பிரித்தானிய மகாராணிக்கு வைத்தியர்கள் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்
Nila
3 years ago

இரண்டு வாரங்களேனும் ஓய்வில் இருக்க வேண்டும் என பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அமர்ந்து ஓரிடத்தில் இருப்பது சிறப்பாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அரச மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 வயதுடைய மகாராணியார் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட மகாராணியாரின் உரை ஒளிப்பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிமை கவிஞர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வில் வீடியோ தொழிநுட்பம் மூலம் மிகவும் மகிழ்ச்சியக மகாராணியார் கலந்துக்கொண்டிருந்ததாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.



