நிறைவுக்கு வரவிருக்கும் உலக சுகாதார ஸ்தாபன தலைவரின் பதவிக்காலம்

Nila
3 years ago
 நிறைவுக்கு வரவிருக்கும் உலக சுகாதார ஸ்தாபன தலைவரின் பதவிக்காலம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரஸ் எதனம் கெப்ரேயசஸின் பதவி தவணைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில் அவரே ஸ்தாபனத்திற்கான ஒரே தலைவர் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

56 வயதுடைய எதியோப்பியாவின் முன்னாள் சுகாதார மற்றும் வெளிவிவகார அமைச்சராக டெட்ரஸ் எதனோம் கெப்ரேயசஸ் கொவிட் 19 தொற்றை பரவுவதை தடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான தலைமைப்பதவிக்கு 2017 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர்.இவரது பதவிக்காலம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.

பிரான்ஸ்,ஜேர்மனி,இந்தோனேஷியா,நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட 28 நாடுகளின் ஆதரவை டெட்ரஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தப் பதவிக்கான பரிந்துரைக்காலம் செப்டெம்பர் 23 ஆம் திகதியுடன் நிறைவுபெறுகின்றது.

தமது தேர்வுகளை நாடுகள் முத்திரையிடப்பட்ட கடித உறையை ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கையளித்துள்ள நிலையில் அவை ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது.

ஐநாவின் பலமான அதிகாரியாக 2017 ஆம் ஆண்டு டெட்ரஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்தாலும் தாயகமான எதியோப்பியாவின் டிக்ரே பிராந்திய மோதல் குறித்து டெட்ரஸ் தூரமாக இருந்தமை விமர்சனத்துக்கு உள்ளானதுடன் வேட்பாளராக அவரை மீண்டும் தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.

ஐக்கிய நாடுகளின்  உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான தலைமைகளை அவர்களின் சொந்த நாடுகளே பிரேரிக்க வேண்டும்.

மே மாதம் அளவில் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இரகசியமாக நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கத

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!