கோட்டாபயவின் வருகையை எதிர்க்கும்படியாக ஸ்கொட்லாந்து கட்டடங்களில் ஒளிரும் பரப்புரைகள்
Nila
3 years ago

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்திற்கு வரவுள்ள நிலையில் அதனை எதிர்த்து லண்டனிலுள்ள புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கிய கட்டடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் கோட்டாபயக்குமம் எதிராக மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்கொட்லாந்தில் வெளியிடப்படும் பத்திரிகைகளில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் ஸ்கொட்லாந்து வருவதான அடிப்படையில் ஆக்கங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் உட்பட முக்கிய கட்டடங்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் டிஜிட்டல் காணொளி மூலம் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



