பிரித்தானியாவுக்கு வரவிருக்கும் இலங்கையருக்கு மகிழ்ச்சியான செய்தி
Nila
3 years ago

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க முடியும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்படும்.
Oxford/AstraZeneca,Pfizer, BioNTech,Moderna,Janssen ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய தகுதி பெறுவார்கள் என உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பிரித்தானியா செல்லும் பயணிகள் 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



