பிரித்தானியவில் கடைகள், உணவகம் வைத்திருப்போருக்கு நற்செய்தி

இன்று பிரித்தானிய நிதி அமைச்சர் வெளியிட்ட வரவு செலவு அறிக்கையின் படி வியாபார நிலையங்களுக்கான பிசினஸ் ரேட் அறவிடுவதில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். இது விருந்தோம்பல் நிலையங்கள் மற்றும் கடைகளும் அடங்கும். இந்த புதிய அறிவிப்பின் படி ஏற்கனவே அறிவித்த வருடாந்த வரி உயர்த்தப்பட மாட்டாது.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் தான் 25 பில்லியன் வரியை மேற்கொள்ளும் திட்டத்தை முற்றிலுமாக இல்லாமல் ஆக்க முடியாது, ஆனால் கடைகள், உணவகங்கள், சினிமா போன்ற வியாபார நிலையங்களின் சுமையை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ் வியாபார நிலையங்களின் மீதான பிசினஸ் ரேட் ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு பதிலாக ஒவ்வொரு மூன்று வருடத்துக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும், மேலும் வரி இரண்டாவது வருடமாக உயராது, அதைபோல் சில்லறை வியாபாரம், விருந்தோம்பல் மற்றும் பொழுது போக்கு நிலையங்களுக்கு வரி 50 விகிதம் குறைக்கப்படும்.



