43 லட்சம் வங்கிக்கடன் வாங்கி போக்கிமன் கார்டு வாங்கிய நபர்

Prasu
3 years ago
43 லட்சம் வங்கிக்கடன்  வாங்கி போக்கிமன் கார்டு வாங்கிய நபர்

கொரோனா காலத்தில் அமெரிக்க வங்கியில் வழங்கப்பட்ட கடனை பயன்படுத்தி நபர் ஒருவர் போக்கிமான் கார்டு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல நாடுகளில் தொழில் துறைகள் முடங்கின. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்காவில் சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் இந்த தொழில் கடனாக இந்திய மதிப்பில் ரூ.43 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் அதில் தொழில் வளர்ச்சிக்கு ஏதும் செய்யாமல் பிரபலமான அனிமே தொடரான போக்கிமான் தொடரை மையப்படுத்தி வெளியான விளையாட்டு கார்டுகளை வாங்கியுள்ளார். வங்கியில் கடன் வாங்கி அரியவகை போக்கிமான் கார்டுகளை ஒருவர் வாங்கிய சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!