மிகப் பெரிய நீல மாணிக்கம் டுபாய் செல்கிறது
#Gems
#Ratnapura
Prathees
3 years ago

இரத்தினபுரி கஹவத்தையில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கம் துபாய் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணிக்கம் அங்கு நடைபெறவுள்ள மாணிக்கக் கண்காட்சியில் பரிசளிப்பதற்காக இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
510 கிலோகிராம் எடையுள்ள இந்த பெரிய ரத்தினக் கற்களின் மதிப்பு குறித்து இரத்தினத் துறையில் உள்ள வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
குறித்த நீல மாணிக்கத்திற்கு “Serendipity Sapphire” (“செரண்டிபிட்டி சபையர்”) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.



