பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
#Arrest
#Police
Prathees
3 years ago

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் வனாத்தவில்லு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலையத்தில் போடப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றை பெண்ணுக்கு சாதகமான முறையில் முடித்துக் கொடுப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்த பெண்ணிடம் இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார் என எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.
இதுபற்றி குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், புத்தளத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளனர்.



