தன்னை சிறையில் அடையுங்கள் - போலீசாரிடம் மன்றாடும் இளைஞன்

Prasu
3 years ago
தன்னை சிறையில் அடையுங்கள் - போலீசாரிடம் மன்றாடும் இளைஞன்

தன்னை சிறையில் அடையுங்கள் - போலீசாரிடம் மன்றாடும் இளைஞன் 

மனைவியின் கொடுமை தாங்காமல் தன்னை சிறையில் அடைத்துவிடுங்கள் என இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் மன்றாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரத்தை ஒட்டி கைடோனியா மாண்டெசெலியோ என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் இளைஞர் ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார். இந்தக் குற்றத்திற்காக அவரை போலீசார் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். அவர் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார். இவரின் தண்டனைக் காலம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் அந்த இளைஞர் வீட்டிலிருந்து தப்பித்து காவல்நிலையம் வந்துள்ளார்.

அப்போது, போலீசாரிடம் அந்நபர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்குகம் வகையில் இருந்தது. அதாவது, இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். வீட்டில் என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு நரகம் போலாகிவிட்டது. தயவுசெய்து என்னைச் சிறையில் அடைத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த குற்றத்திற்காக போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி, அவரது கோரிக்கையை ஏற்று சிறையில் அடைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!