கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு
Prabha Praneetha
3 years ago

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகள மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



