கமல்ஹாசன், இளையராஜாவுக்கும் விருது வழங்க வேண்டும் – வைரமுத்து கோரிக்கை!
Prabha Praneetha
3 years ago

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறித்து வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டுக்கான திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.



