இத்தாலியை தாக்கிய கடும் புயுற்காற்றால் நீரில் மூழ்கியகுடியிருப்புக்கள் - இருவர் பலி

இத்தாலியின் சிசிலி தீவை பலமான புயுற்காற்று தாக்கியுள்ளது.கெட்டனியா உள்ளிட்ட நகரங்களில் பெரும் வெள்ள நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் காற்றில் வீசுப்பட்ட நிலையில் கார் ஒன்றின் கீழ் சிக்குண்டிருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் மூழ்கியுள்ளன.
இவ்வாறிருக்கையில் அவசர தேவைக்காக அன்றி வேறு எதற்கும் வீடுகளில் இருந்து மக்களை வெளியேற வேண்டாம் என்று மக்களை கோருவதாக மேயர் சல்வோ பொக்லீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வர்த்தக நிலையங்கள் என்பன நள்ளிரவு வரை திறந்திருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயற்காற்று வியாழன் மற்றும் வெள்ளியன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.



