கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
#Covid 19
#Covid Vaccine
Prathees
3 years ago

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளநிலையில், இதுவரை தடுப்பூசியினை பெறாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறுவதற்கான தகுதியுடைய பலர் அதனைச் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும்.
எனவே தடுப்பூசியினை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.



