புதிய விதத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள்
Prabha Praneetha
3 years ago

அதிபர் -ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை புதிய விதத்தில் இன்று முதல் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் கல்வி நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையலான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சில ஆசிரியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத போதிலும் ஏனையவர்கள் கடமைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



