அமெரிக்க தபால் கந்தோரில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
#world_news
#United_States
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்காவின் டென்னிசி நகரின் மெம்பிஸ் பகுதியில் தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவகத்தில் நேற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, திடீரென ஊழியர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து சக ஊழியர்களை நோக்கி சுடத் தொடங்கினார்.
இதனால், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து சிதறி ஓடினார்கள். எனினும் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்