பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

Keerthi
3 years ago
பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

பிரிட்டன் பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை. பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 'கோவிஷீல்டு' தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும், அதை பிரிட்டன் ஏற்க மறுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பிரிட்டன் பயணியருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமானம் ஏறுவதற்கு முன் ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை, 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டன.இதனால் அதிர்ந்துபோன பிரிட்டன் அரசு, இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. கோவிஷீல்டு தடுப்பூசியையும் அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது.பிரிட்டன் அரசு நம் வழிக்கு வந்துஉள்ளதால், பிரிட்டன் பயணியருக்கு கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசும் திரும்பப்பெற்று உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!