அமெரிக்க கடற்படை தளபதி இந்த வாரம் இந்தியா செல்கிறார்.
#world_news
#United_States
Mugunthan Mugunthan
3 years ago

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துகிறார்.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் நடப்பதாக அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



