ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம்: கரோலினா கவர்னர் அறிவிப்பு

#world_news #United_States
ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம்: கரோலினா கவர்னர் அறிவிப்பு

அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஹிந்து மதம் பரவியுள்ளன. சதவீத அடிப்படையில் ஹிந்து மத மக்கள் அதிகம் உள்ள நாடாக நேபாளம் உள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்தியா, மொரிசீயஸ் நாடுகள் உள்ளதாக சில ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன.

அந்த வகையில், ஹிந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ஹிந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பர், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:

ஹிந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும். உலகளவில் ஹிந்து மதத்தில் நூறு கோடி பக்தர்களும், அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பக்தர்களும் உள்ளனர். ஹிந்து பாரம்பரியம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன வாழ்க்கையின் பல பிரச்னைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் ஹிந்து மதத்தின் போதனைகளைப் பார்க்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தையும் சிந்தனையையும் தருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!