ரஷ்யா விமான விபத்து - 16 பேர் உயிரிழப்பு!

#Accident
Prasu
3 years ago
ரஷ்யா விமான விபத்து - 16  பேர் உயிரிழப்பு!

ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் ரஷியாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!