ஆப்கானிஸ்தான்-அமெரிக்கா டோகாவில் முதல் பேச்சுவார்தையை இன்று தொடங்கினர்!
#world_news
#Afghanistan
Mugunthan Mugunthan
4 years ago
ஆப்கானிஸ்தானின் பதில் வெளியுறவு மந்திரி கருத்துப்படி, தலிபானின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் உறவில் "ஒரு புதிய பக்கத்தைத் திறப்பது" பற்றி விவாதித்தனர்.
இன்று சனிக்கிழமை டோகாவில் தொடங்கிய தனிப்பட்ட சந்திப்பு கூட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு நடக்கும் முதல் கலந்துரையாடலாகும்..
ஆப்கானிஸ்தானின் பதில் வெளியுறவு மந்திரி முல்லா அமீர் கான் முத்தாகி, தெரிவிக்கையில் ஆப்கானிஸ்தானின் துாதுக்குழுவின் கவனம் மனிதாபிமான உதவியாகும் என்றார். அத்துடன் கடந்த ஆண்டு வாஷிங்டனுடன் தலிபான்கள் கையெழுத்திட் ஒப்பந்தம் ஆகும். இதுவே அமெரிக்காவின் வாபஸ் நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுத்தது.