மீண்டும் இயக்குனராக களமிறங்கும் நடிகை ரேவதி
Prabha Praneetha
3 years ago

80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி.
இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்குவதிலும் கவனமாக இருந்தார்.
இதுவரை ரேவதி இயக்கத்தில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மலையாளம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து படங்களை இயக்காமல் இருந்து வந்த ரேவதி, தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
அதன்படி இந்தியில் தயாராகும் ‘தி லாஸ்ட் ஹரா’ என்ற படத்தை அவர் இயக்க உள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க இருக்கிறார் என்று அவரே தெரிவித்துள்ளார்..



