பிரான்ஸில் காவல்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஒருவர் கைது!

#world_news #France
பிரான்ஸில் காவல்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஒருவர் கைது!

பிரான்ஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒக்டோபர் 2 ஆம் திகதி இரவு Versailles (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மதுபானச்சாலையில் ஏற்பட்ட சிறு குழப்பத்தை அடுத்து, மதுச்சாலையின் முதலாளி காவல்துறையினரை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த 28 வயதுடைய பெண்ணை அங்கிருந்து செல்லும் படி பணித்துள்ளார். நிறைந்த போதையில் இருந்த அவர், காவல்துறையினர் மீது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடில்லாமல், அவர்களை தாக்கவும் முற்பட்டார்.

10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த குழப்பம் 11 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் அதிகாரிகள் மின்சார துப்பாக்கியால் குறித்த பெண்ணை சுட்டு மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!