சிவகார்த்திகேயன் சுந்தர் சி கூட்டணியில் ஒரு படம்…
Prabha Praneetha
3 years ago

நடிகை குஷ்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை சுந்தர் சி இயக்குவதற்கான வேலைகளில் குஷ்பு இறங்கியுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகாலமாக கமர்ஷியல் படங்கள் இயக்குவதில் வல்லவராக இருந்து வருபவர் சுந்தர் சி. எத்தனையோ தோல்வி படங்களைக் கொடுத்தாலும், மறுபடியும் மீண்டு வந்து ஹிட் படம் கொடுத்து வருகிறார்.
இப்போது அவரின் இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இப்போது இருக்கும் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் சுந்தர் சி ஒரு படம் இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக சிவகார்த்திகேயனிடம் குஷ்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.



