தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!
#Covid Vaccine
Prasu
3 years ago

தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



