சுவிற்சலாந்தில் பெண்களுக்கான ஓய்வுதிய வயது அறுபத்தைந்தா?

சுவிற்சலாந்தில் இதுவரை பெண்களுக்கான ஓய்வுதிய வயது 60 ஆக காணப்பட்டது. தற்போது இதில் மற்றும் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது
சுவிஸ் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் பேர்னில் அணிவகுத்தனர், குறிப்பாக பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 64 லிருந்து 65 ஆக உயர்த்தும் திட்டம் இதில் உள்ளடங்குகிறது.
பெர்ன் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 15,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
“எங்கள் ஓய்வூதியத்தில் கைவைக்காதே” என்ற முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போதைய ஓய்வூதிய முறை “வாழ்வதற்கு போதுமானதாக இல்லை” என்றும், அரசியல்வாதிகள் அவற்றை குறைக்க முயற்சிப்பதை விட கொடுப்பனவுகளை உயர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் செய்திக்குறிப்பு கூறியுள்ளது.



