வெங்கட்பிரபுவிடம் ஹர்பஜன்சிங் விடுத்த வேண்டுகோள்!
#TamilCinema
Prabha Praneetha
3 years ago

தல அஜீத் நடித்த ’மங்காத்தா’ படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என அஜித் ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஹர்பஜன்சிங் நடித்த ’ப்ரெண்ட்ஷிப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகிய நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் ’மங்காத்தா-2’ பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நடிகர் ஆர்யா தனது வாத்தியார் பசுபதியை சைக்கிளில் அழைத்துச் சென்ற மீம்ஸ் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் ’கபிலா ஆர்யா அவர்களே என்னையும் ஒரு ரவுண்டு அந்த சைக்கிளில் கூட்டிட்டு போங்க’ என்று ஆர்யாவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



