வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி
2026 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான் 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் ஏ அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில், ஷாஹ்சைப் கான் 60 ஓட்டங்களும் ஷமில் ஹூசைன் 40 ஓட்டங்களும் ரோஹைல் நசீர் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் 220 ஓட்டங்களை பெற்று 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில், பவன் ரத்நாயக்க 30 ஓட்டங்களும் நிஷான் மதுஷ்க 87 ஓட்டங்களும் லசித் குரூஸ்புள்ளே 26 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்த அபார வெற்றியின் மூலம் 2026 வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்தைக் கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.