மஹியங்கனையில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 22 பேர் காயம்!
#SriLanka
#Police
#Accident
#Investigation
#Hospital
#Bus
#Road
Mithra
1 hour ago
மஹியங்கனை – கண்டி வீதியின் பாலம சந்திப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 22 பயணிகள் மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.