மடபாத பகுதியில் சட்டவிரோத மதுபானம் மீட்பு: ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#LANKA4
#liquor
#illegal
Mithra
38 minutes ago
கொழும்பு, கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடபாத பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 100 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.