கெஸ்பேவ பகுதியில் நண்பரைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கொலை – மூவர் கைது!

#SriLanka #Arrest #Police #Investigation #LANKA4
Mithra
1 hour ago
கெஸ்பேவ பகுதியில் நண்பரைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கொலை – மூவர் கைது!

கெஸ்பேவ பகுதியில் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல் போன 30 வயதுடைய இளைஞர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களை கெஸ்பேவ காவல்துறையினர் நேற்று (28) கைது செய்துள்ளனர். முருதலாவ – கருவலவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த 24ஆம் திகதி பேராதனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகளின்போது, கடந்த 23ஆம் திகதி நண்பரைச் சந்திக்கச் சென்ற இளைஞருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, நண்பர் உள்ளிட்ட சிலர் இணைந்து அவரைக் கொலை செய்து சடலத்தை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20, 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்பதுடன், மடபாத்த மற்றும் பொல்கஸ்ஓவிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடத்தில் நீதவான் விசாரணை இன்று (29) முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!