உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா இலங்கையில் ஆரம்பம்!

#LANKA4 #President #council #celebration #AnuraKumaraDissanayake #Anniversary #Buddhist
Abi
39 minutes ago
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா இலங்கையில் ஆரம்பம்!

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (28) முற்பகல் களனி, மானெல்வத்தை நாகானந்த சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தில் (NIIBS Campus) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டபோது, சர்வதேச மட்டத்திலான இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விழாவை இலங்கையில் நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கையின் பௌத்த மரபுரிமையையும் சமய அடையாளத்தையும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

புத்த பெருமானின் போதனைகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றைப் பின்பற்றி வாழ்வதன் மூலம் உலக சமூகத்திற்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்த முடியும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், இலங்கையை தேரவாத பௌத்த தர்மத்தின் சர்வதேச மையமாக மாற்றும் நோக்கில் நாகானந்த சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தை நிறுவிய வணக்கத்திற்குரிய போதாகம சந்திம நாயக்க தேரரின் முயற்சிகளுக்கும், ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக அவர் மேற்கொண்டுவரும் பணிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றியடையவும் இதன்போது வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!