நீரிழிவு நோய் அபாயம் அதிகரிப்பு! யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடைப்பயணம்

#SriLanka #Jaffna #LANKA4 #diabetes #walk #Awareness
Abi
58 minutes ago
நீரிழிவு நோய் அபாயம் அதிகரிப்பு! யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடைப்பயணம்

நீரிழிவு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இன்று (28) 5 கிலோமீற்றர் விழிப்புணர்வு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண அகஞ்சுரப்பியல் பிரிவு, யாழ். நீரிழிவு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணத் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, ஆசிரியர் குணசீலன், ஆசிரியர் லலிசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், மருத்துவ மற்றும் தாதியர் சமூகத்தினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உலகளவில் சுமார் 59 கோடி மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவதாகவும், இலங்கையில் 2018–2019ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதார ஆய்வின்படி, வயது வந்தவர்களில் சுமார் 23 சதவீதமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் பரம்பரைக் காரணிகள் ஆகியவை வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகும்.

இந்நோயைக் கட்டுப்படுத்தத் தவறினால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பார்வையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடத்தல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரப்பியல் பிரிவு, நீரிழிவு மையம் மற்றும் ஏனைய விசேட மருத்துவப் பிரிவுகள் ஊடாக நீரிழிவு நோயைக் கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது மாத்திரமன்றி, அவை ஏற்படுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் வைத்தியசாலையின் முக்கிய பணியாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோயைத் தடுப்போம், உடற்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்குவோம், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!