சுவிஸ் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஃகு தொழிலதிபர்
இந்திய எஃகு கோடீஸ்வரர் லக்ஷ்மி மிட்டலின் குடும்பம் 32 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சுவிட்சர்லாந்தின் ஐந்தாவது பணக்காரக் குடும்பமாக மாறியுள்ளது.
லக்ஷ்மி மிட்டல் செயின்ட் மோரிட்ஸுக்குக் குடிபெயர்ந்ததைத் தொடர்ந்து, ஆர்செலர் மிட்டல் குடும்பம் 27 பில்லியன் முதல் 28 பில்லியன் பிராங்குகள் சொத்து மதிப்புடன் சுவிட்சர்லாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிஸ் வணிக இதழான 'பிலான்ஸ்' ஒவ்வொரு ஆண்டும் தொகுக்கும், சுவிட்சர்லாந்தின் 300 பணக்காரர்கள் மற்றும் குடும்பங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற முதல் ஆண்டிலேயே மிட்டல் குடும்பத்தினர் முதல் ஐந்து இடங்களுக்குள் நேரடியாக நுழைந்துள்ளனர்.
26 பில்லியன் முதல் 27 பில்லியன் பிராங்குகள் சொத்து மதிப்பு கொண்ட சஃப்ரா வங்கி குடும்பத்தை விட ஒரு இடம் முன்னிலையில் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய எஃகு உற்பதியாளர்களில் ஒன்றான ஆர்செலர் மிட்டல் எஸ்.ஏ. நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான 76 வயதான மிட்டல், தனது சட்டப்பூர்வ வசிப்பிடத்தை கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸுக்கு மாற்றினார்.
ஐக்கிய இராச்சியம் செல்வந்த வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கான வரி விதிப்பு முறையை ரத்து செய்து, அதன் வாரிசுரிமை வரியின் வரம்பை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து, அவர் 2025ல் பிரிட்டனை விட்டு சுவிட்சர்லாந்துக்குச் சென்றார்.