கடற்றொழில் துறைக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு – 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய சாதனை!

#SriLanka #Parliament #LANKA4 #budget
Abi
39 minutes ago
கடற்றொழில் துறைக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு – 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய சாதனை!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு 24,024.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

அண்மைக்கால வரலாற்றில் கடற்றொழில் துறைக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய நிதி இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயப்படுத்துதல், நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் மீனவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், மீனவர்களுக்கான உயிரிழப்புக் காப்புறுதி இழப்பீட்டை ஒரு மில்லியன் ரூபாயிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாயாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!