ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தமிழக வெற்றி கழக உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது

#India #Tamil Nadu #ARREST #LANKA4 #Harassment #Politician #L4
Prasu
48 minutes ago
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தமிழக வெற்றி கழக உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

வீட்டிலிருந்த அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!