உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடிய இருவர் உயிரிழப்பு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைத்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக பேனர் கட்டும் பணிகள் வெங்கல்அருகே உள்ள வாணியன்சத்திரம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே நடைபெற்றது.
இதில் வாணியன்சத்திரம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வீரேந்தர் மற்றும் ஆல்பர்ட், காரணி கிராமத்தை சேர்ந்த 30 வயது வேலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
அவர்கள் பேனரை இரும்பு பிரேமில் பொருத்தி சாலை ஓரம் கட்ட தூக்கினர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அருகே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பேனரின் இரும்பு கம்பி உரசியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் வீரேந்தர்,வேலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதில் பலியான வீரேந்தர் தி.மு.க.வில் ஊராட்சி இளைஞரணி துணை அமைப்பாளராகவும் வேலன் தகவல் தொழில் நுட்ப அணியில் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்.