அஸ்வெசும பயனாளிகளுக்கு விசேட நிவாரணத்துடன் கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்பட்டது!

#SriLanka #today #Emergancy #Economic #Deposit
Abi
4 hours ago
அஸ்வெசும பயனாளிகளுக்கு விசேட நிவாரணத்துடன் கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்பட்டது!

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுடன், விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவும் இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மிக வறிய குடும்பங்களுக்கு வழமையாக வழங்கப்படும் 17,500 ரூபாய் கொடுப்பனவுடன் மேலதிகமாக 3,000 ரூபாயும், வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவுடன் மேலதிகமாக 2,000 ரூபாயும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மிக வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இம்மாதம் மொத்தமாக 20,500 ரூபாயும், வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கப்பெறுகின்றது.

இம்முறை அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெறும் மிக வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 381,369 ஆகவும், வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 635,761 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, நவம்பர் மாதத்தில் மொத்தமாக 1,017,130 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதற்காக 2.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!