சாமர சம்பத் உள்ளிட்ட இருவருக்கும் டிசம்பர் 11 வரை மீண்டும் விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் சாமர சம்பத் தசநாயக்கவும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (27) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.