டித்வா சூறாவளி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு!

#SriLanka #Death #LANKA4 #Public #Cyclone
Mithra
59 minutes ago
டித்வா சூறாவளி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு!

நாட்டில் 700 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டதுடன், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட டித்வா சூறாவளி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (27) ஓராண்டு நிறைவடைகின்றது.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி டித்வா சூறாவளியின் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.

இந்த அனர்த்தத்தினால் 2 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 700 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

மேலும், சுமார் 200 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அண்மைய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி, பதுளை, நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்கள் இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

ஆயிரக்கணக்கான வீடுகள், வீதிகள், பாலங்கள், தொடருந்துப் பாதைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகின. இதன்போது 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகவும், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வீடமைப்பு, இழப்பீடு வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பதுளை நகரில் சர்வமத நினைவேந்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பேரனர்த்தம் ஏற்பட்டு ஓராண்டு கடந்துள்ள போதிலும், உறவுகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த பல குடும்பங்கள் இன்னும் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளன.

டித்வா பேரனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவதுடன், இவ்வாறானதொரு பேரனர்த்தம் மீண்டும் நாட்டில் ஏற்படக்கூடாது என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!