பொதுமக்களின் கவனத்திற்கு - பொய்யான அனர்த்த எச்சரிக்கைகளை வெளியிடுவோருக்கு சட்ட நடவடிக்கை

#SriLanka #LANKA4 #Warning #Social Media #Climate #L4
Prasu
1 hour ago
பொதுமக்களின் கவனத்திற்கு - பொய்யான அனர்த்த எச்சரிக்கைகளை வெளியிடுவோருக்கு சட்ட நடவடிக்கை

வெள்ளம், சுனாமி, புயல், கனமழை, குளங்களின் நீர்மட்ட உயர்வு மற்றும் ஏனைய அனர்த்தங்கள் தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களின் அனுமதியின்றி அனர்த்த எச்சரிக்கைகளை வெளியிட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவது இலங்கைச் சட்டத்தின்படி குற்றமாகும்.

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டம் இலக்கம் 13 of 2005 – 2011ம் ஆண்டு திருத்தம், பிரிவு 23(1)(c)

இந்தச் சட்ட ஏற்பாட்டின்படி, அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களின் அனுமதியின்றி அனர்த்த எச்சரிக்கைகளை வெளியிட்டு சமூகத்தில் பீதியை ஏற்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

சட்டத்தின் கீழான தண்டனை:

  • அதிகபட்சம் 02 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
  • அல்லது ரூ.50,000 வரை அபராதம்.
  • அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும்.

இக்குற்றம் தொடர்பான வழக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுருக்க விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

எவை தவிர்க்கப்பட வேண்டும்?

  • குளம் உடைந்துவிட்டது என உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புதல்.
  • சுனாமி தாக்கவுள்ளதாகப் போலியான எச்சரிக்கைகளை வெளியிடுதல்.
  • வெள்ளம் அல்லது அணைக்கட்டுகள் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்புதல்.
  • அரச நிறுவனங்கள் வெளியிட்டதாகப் போலியான அனர்த்த அறிவித்தல்களை உருவாக்குதல்.
  • பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அனர்த்தச் செய்திகளைத் திரித்துப் பரப்புதல்.

பொதுமக்களுக்கான வேண்டுகோள்!

  • அனர்த்தம் தொடர்பான உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளை இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உறுதிப்படுத்தப்படாத தகவல்களை WhatsApp, Facebook, TikTok மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு பொய்யான அனர்த்த எச்சரிக்கை ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கலாம். தவறான தகவல் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!