களு கங்கை, அத்தனகலு ஓயா நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியது – பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

#SriLanka #water #Warning #HeavyRain
Mahathi
38 minutes ago
களு கங்கை, அத்தனகலு ஓயா நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியது – பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

களு கங்கை, அத்தனகலு ஓயா நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியது – பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை! நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, களு கங்கையின் நீர்மட்டம் மில்லக்கந்த பகுதியிலும், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தூனமலே பகுதியிலும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!