முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது புதிய வரிகளை விதித்த அமெரிக்கா!

#SriLanka #world_news #LANKA4 #ImportantNews #DonaldTrump
Mithra
38 minutes ago
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது புதிய வரிகளை விதித்த அமெரிக்கா!

இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தனது முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.

இதில் சீனா அதிகபட்சமாக 40% வரை வரியை எதிர்கொள்கிறது. அடுத்ததாக வியட்நாமுக்கு 35 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 25% வரை வரி விதிக்கப்பட உள்ளது. ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 20% வரை வரி விதிக்கப்படும்.

இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுடன் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, உண்மையில் செலுத்த வேண்டிய வரி விகிதங்கள் இதைவிடக் கணிசமாகக் குறைவாக இருக்கும் என்று பிபிசியின் வணிகப் பிரிவு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது அறிவித்துள்ள வரிகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்காவுக்குக் கூடுதல் பேரம் பேசும் வலிமையை அளிக்கக்கூடும் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பலமுறை வரிகளை விதிப்பதாக எச்சரித்தும், சில வரிகளை நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளார். 

இதன் மூலம் அமெரிக்காவில் உற்பத்தித் துறை வளர்ச்சியடைவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று அவர் கூறி வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!