மலேசியாவில் 10,000 வாகனங்களை ஒன்றிணைத்து புதிய சாதனை படைத்த ஜெட்டூர்!

#world_news #Malasia #company #vehicle #Record
Abi
4 hours ago
மலேசியாவில் 10,000 வாகனங்களை ஒன்றிணைத்து புதிய சாதனை படைத்த ஜெட்டூர்!

சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஜெட்டூர் (Jetour), மலேசியாவில் உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட தனது வாகனங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசியாவில் ஒன்றிணைக்கப்பட்ட தனது முதலாவது ஜெட்டூர் டேஷிங் (Jetour Dashing) SUV ரக வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையையும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 2027ஆம் ஆண்டில் சுமார் 7,000 வாகனங்களை ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

குறிப்பாக, வலதுபுறம் செலுத்தும் வசதியைக் கொண்ட வாகனங்களுக்கான சர்வதேச சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்துவதுடன், மலேசியாவை முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த நடவடிக்கையானது மலேசியாவின் வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும், சர்வதேச வாகனச் சந்தையில் அந்நாட்டின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!