6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #District #Warning #ImportantNews #landslide #L4
Lakhi
1 hour ago
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று (25) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (26) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

 இதற்கமைய, நிலை 02 - அவதானத்துடன் இருங்கள் (Amber Alert) என்ற எச்சரிக்கையின் கீழ் கண்டி மாவட்டத்தின் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், நிலை 01 - விழிப்புடன் இருங்கள் (Yellow Alert) என்ற எச்சரிக்கையின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் நில்ந்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, கொத்மலை கிழக்கு, தலவாக்கலை, நோர்வூட் மற்றும் வலப்பனை ஆகிய பிரிவுகளும், கண்டி மாவட்டத்தின் தொலுவ, கங்க இஹல கோரளை, உடபளாத மற்றும் யட்டிநுவர ஆகிய பிரிவுகளும் பெயரிடப்பட்டுள்ளன.

மேலும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, ருவான்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் முதலாம் நிலை விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மலைச்சரிவுகளை அண்டி வசிக்கும் மக்கள், மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அபாயங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!