தெதுறு ஓயாவின் 8 வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Warning
#Flood
#HeavyRain
#ImportantNews
#Public
#Gates
#Open
#L4
Lakhi
5 hours ago
நிலவும் சீரற்ற வானிலையை தொடர்ந்து தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 12,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2 வான்கதவுகள் தலா 3 அடி வீதமும், ஏனைய 6 வான்கதவுகள் தலா 2 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் தெதுறு ஓயாவை அண்டி வசிக்கும் மக்கள் ஆற்றின் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான்கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றமடையக்கூடும் என்பதால், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.